Wednesday, February 9, 2011

mariyaathai raaman kathaikal

                                      ராமன் நீதிபதியான கதை
  சோழ வளநாட்டை அரசாண்ட நீதிநெறி மன்னன், நாடெங்கும் மக்களுக்கு நல்ல முறையில் நியாயம் வழங்க வேண்டுமென விரும்பினான். மக்கள் கொண்டுவரும் வழக்குகளை விசாரித்து பாரபட்சமிள்ளல் நல்ல தீர்ப்பு வழங்குவதற்கு தலைநகரில் ஒரு நீதிமன்றம் ஒன்றை நிறுவி அதற்க்கு சட்ட அறிவு வாய்ந்த ஒருவரை நீதிபதியாக நியமித்தான்.
 அச்சமயம் நான்கு திருடர்கள் நல்லவர்களாக மாற முடிவு செய்தனர். எனவே, அவர்கள் அதுவரை கொள்ளையடித்த பொன், பொருள் நகைகளை எல்லாம் ஒரு குடத்தில் போட்டு நன்கு மூடி  அதைத் தாங்கள் தங்கியிருக்கும் உணவு விடுதியின் சொந்தக்காரியான மூதாட்டியிடம், "பாட்டி! இந்தகே குடத்தில் நாங்கள் போட்டு வைத்திருக்கும் பொன் பொருள்களெல்லாம் எண்கள் நகல் நாலு பேருக்கும் போதுவானதுஆகும், அதனால் நாங்கள் நாலுபேரும் ஒன்றாக  சேர்ந்து  வந்து கே  கேட்டால்  தான்  இதை நீ எடுத்துக் கொடுக்க வேண்டுமே  தவிர நாங்கள் தனியாக வந்து கேட்டாள் தரக்கூடாது" என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். 
 சில தினங்களுக்கு பின் நான்கு திருடர்களும் விடுதியில் அமர்ந்து சுவாரச்யாமாகப் பேசிக் கொண்டிருக்கும் பொது தெருவில் ஒருத்தி நீர்மோர் விற்றுக் கொண்டு சென்றாள். மோர் சுவையை இருந்ததால் மோர் முழுவதையும் ஒரு குடத்தில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்று நான்கு திருடர்களும் விரும்பினார்கள்.
 உடனே அவர்கள் தங்களில் ஒருவனை "அடே! உள்ளே பொய் பாட்டியிடம் கேட்டு நீர்மோர் வாங்குவதற்கு ஒரு குடம் கொண்டு வா" என்றனர். அந்தந்த திருடன் அதுதான் சமயமென்று மூதாட்டியிடம் சென்று "பாட்டி! புதைத்து வைத்திருக்கும் பொன் பொருளான குடத்தை எடுத்துவரச் சொன்னார்கள் என் நண்பர்கள்/" என்றான். சந்தேக பட்ட பாட்டி, வெளித்  திண்ணைக்கு வந்து மற்ற மூன்று பேர்களிடமும் "குடம் எடுத்து வரச் சொன்னீர்களா?" என்று கேட்டாள். அவர்களும் "ஆமாம் பாட்டி! சீக்ரம் அவனிடம் குடத்தை எடுத்துக் கொடு!" என்றனர்.
 மூதாட்டி உள்ளே வந்து நான்காவது திருடனிடம்  ஒரு கடப்பாறையை எடுத்துகொடுத்து"சீக்கிரம்  தோண்டி எடுத்துக கொண்டு போ அப்பா! என் பொறுப்பு தீர்ந்தது." என்றால் அவன் கொல்லைப்புறத்தில் புதைத்து வைத்திருந்த பொன் பொருள்களுள்ள குடத்தை எடுத்துக் கொண்டு கொல்லைப் புறமாக வேகமாக ஓடிவிட்டன.
 நீண்ட நேரமாக நண்பனைகாணாத மூன்று திருடர்களும் நடந்த மோசத்தை அறிந்தனர். உடனே மூன்று சகாக்களும் "பாட்டி! நீதான் அந்த நஷ்டத்தை வேண்டும்" என்றுக் கூறி அவள் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்.
 பிரதிவாதியான மூதாட்டி "ஐயா, நோஈதிமானே! நான் மனதாலும் மோசம் செய்ய நினைத்தவலன்று! அந்த நால்வரில் ஒருவன் மோசமாக பொன் குடத்தை தோண்டி எடுத்துக்கொண்டு போனானென்றால் நான் எப்படி நஷ்ட்ட ஈடு கொடுப்பேன்? நானோ ஏழை" என்றால்.
 வழக்கை விசாரித்த நீதிபதி, "பாட்டி! உன் நிலை பரிதாபமானது  தான். ஆனால் இந்த நஷ்டத் ஈடு 
பற்றிய வழக்கில் உன் உள்நோக்கம் பற்றி எனக்கு கவலை இல்ல. நீ ஒப்புக்கொண்ட வார்த்தைகள்தான் சட்டப்படி செல்லக் கூடியதாகும்! நாலு பெரும் ஒன்றாக வந்து கேட்டால்தான் பொன் பணத்தை நீ எடுத்துக் கொடுக்களால் என்ற நிபந்தனைக்கு ஒப்புக் கொண்ட நீ, அதற்க்கு மாறாக நால்வரில் தனியாக  ஒருவன் வந்து பொதுப் பணத்தை எடுத்துச் செல்ல அனுமதிதிருகிறாய்! அதனால் மற்ற மூன்று பேருக்கும் ஏற்பட்ட நஷ்ட்டதிற்கும் நீதான் ஈடு கொடுக்க வேண்டும்!" என்று தீர்பளித்தார். 
 அதைக் கேட்ட மூதாட்டி "ஐயோ! நான் என்ன செய்வேன், தெய்வமே!" என்று புலம்பி அழுத வண்ணம் தன் குடிசையை நோக்கி நடந்தால்.
 அவள் வரும் வழியில் இராமன் என்கிற ஒரு வாலிபன் தெருவிலுள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு பொழுது போக்குவதற்காக விளையாடிக் கொண்டிருந்தான். அவன் அறிவாற்றலும் அன்புள்ளமும் கொண்டவன். அவன் அறிவாற்றலும் அன்புள்ளமும் கொண்டவன். அதனால் அவ்வழியே வந்த மூதாட்டியை நோக்கி"பாட்டி! என் அழுகிறாய்?" என்று விசாரித்து அவளிடமிருந்து விஷயத்தை தெரிந்து கொண்டதும் மிகவும் ஆத்திரமடைந்தான். "இந்த அநியாயத் தீர்ப்பு வழங்கியவர் வாயில் மண் விழட்டும்!" என்று தன் கைகளில் இருந்த கைகளை ஆத்திரமாக விட்டெறிந்தான் . அடஹை அருகிலிருந்து கேட்டவர்களில் சிலர் நேரே அரசனிடம் சென்று கூறவே வாலிபனான இராமனை மன்னர் வரவழைத்து "அடேய் இராமா! என்னுடைய நீதிபதி சட்டப்படி வழங்கிய தீர்ப்பை அணியாயமேன்று சொன்னே நீ. நீதி பிசகாமல் இந்த வழக்கிற்கு உன்னால் தீர்ப்பளிக்க முடியுமா?" என்று கேட்டார். அதற்க்கும்படி உத்தரவிட்டால் மட்டுமே என்னால் தீபளிக்க முடியும்!" என்றான். அதற்க்கு ஒப்புக்கொண்டான் மன்னன்.
 பின்னர் வாதிகளான மூன்று திருடர்களும் பிரதிவாதியான மூதாட்டியும் மறு விசாரணைக்கு இராமன் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். வழக்கை திரும்பவும் விசாரித்த இராமன், "சட்டரீதியாக பாட்டி ஒப்புக்கொண்டபடி நடக்க வேண்டாம் என்பதில் சந்தேகமில்லை. எனவே நாலு பேரும் ஒன்றாக சேர்ந்து வந்து உங்கள் குடத்தை கேட்டாள் பட்டி இப்பொழுதே எடுத்துக் கொடுப்பாள்" என்றி தீர்ப்பு வழங்கினான். 
 அதை கேட்ட மூன்று திருடர்களும் நொந்து போனார்கள். மூதாட்டிக்கு உண்டான துக்கமும் நொடியில் நீங்கிவிட்டது. இராமனின் தீர்ப்பை அனைவரும் பாராட்டினர். 
 இராமனின் கூர்மையான அறிவைக் கண்டு வியந்த சோழ மன்னன் அவனுக்கு வெகுமதிகள் வழங்கி "இராமா! உன்னை போன்ற புத்திசாலிதான் நீதிமன்றத்துக்கு தேவை. அதனால் இன்று முதல் நீயே நீதிபதியாக இரு! உன்னுடைய புத்திசாதூரித்தை பாராட்டி "மரியாதைராமன்" என்ற பட்டதை உனக்கு சூட்டுகிறேன்!. எம்றார்.
 அன்று முதல் இராமன் மரியாதைராமன் என்ற பட்டதுடன் தலை சிறந்த நீதிபதியாக எல்லாரும் புகழும் படி விளங்கினான்.